தினகரன் வாரமஞ்சரியின் வாசகர் வட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.12.2012 அன்று முற்பகல் 9.30 மணிக்கு யாழ் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வில் யாழ் அரசஅதிபர் இல்மெடா சுகுமார், யாழ் பாதுகாப்பு தலைமையகத்தை சேர்ந்த கேணல் மல்லவராட்சி வடுகொட, லேக்கவுஸ் பணிப்பாளர் உபுல் திசாநாயக்க, தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த வைபவத்தில் கடந்த 25வருடங்களுக்கும் மேலாக தினகரனில் கடமையாற்றி வரும் சிரேஸ்ர ஊடகவியளாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் மூத்த பத்திரிகையாளர் செல்லப்பா கதிர்காமத்தம்பி, புகைப்படக் கலைஞர் கதிரவேலு, தீவக செய்தியாளர் இ.சற்குருநாதன், வடமராட்சி செய்தியாளர் ஏ.என்.எஸ்.திருச்செல்வம், நெடுந்தீவு செய்தியாளர் நா.இலட்சுமணராசா போன்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம் பெற்றன. அதில் ஊடக மாணவர்களின் 'வண்டியும் தொந்தியும்' என்ற நாடகமும் தேசியமட்டத்தில் முதலிடம் பெற்ற 'கற்பூர தீபம்' எனும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது. அத்துடன் 'பண்பாடு படும்பாடு' எனும் தலைப்பில் கவியரங்கமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய இயக்குனர் தே.தேவானந்தின் தலைமையில் 'ஊடகத்திடம் இருந்து மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவும் இடம் பெற்றது.



6:14 AM
sugani










0 comments:
Post a Comment