flashvortex

Tuesday, January 31, 2012

மந்திகை கண்ணகை அம்பாள் ஆலய மகாகும்பாவிஷேகம்

அருள் மிகு மந்திகை கண்ணகை அம்பாள் ஆலய மகா கும்பாவிஷேகம் எதிர்வரும் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ் நாயன்மார்கட்டு அரச விநாயகர் ஆலய முதல்வர் சிவஸ்ரீ சதா மகாலிங்க சிவகுருக்கள் பிரதம குருவாக இருந்து மகா கும்பாவிஷேகத்தை நடாத்தவுள்ளார். தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும்.

கும்பாவிஷேக நிகழ்வை முன்னிட்டு ஆலயக்குருக்கள் அனைவரும் வீதியால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Friday, January 27, 2012

டாக்டர் A.P.J அப்துல் கலாமை பார்க்க சென்ற போது!!!!!!!!!!!

உலகம் அறிவியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொது அமெரிக்கர்களையே தன்னை திரும்பி பார்க்க வைத்த மூன்றாம் உலக நாட்டின் அறிவியலாளன் அப்துல் கலாம் என்றால் மிகையாகாது.

கனவு காணுங்கள் நான் கனவு காணுகிறேன்......பறந்து கொண்டிருப்பதைப் போல பறந்து கொண்டிருக்கின்றேன் என்ற அப்துல் கலாமின் வார்த்தைகள் இன்று யாழ் மண்ணில் ஒலித்தது.........

என்னங்க புரியலையா? அப்துல் கலாம் இலங்கையிலா? அதுவும் யாழ்ப்பாணாத்திலையா ? என்று உங்களுக்கு நினைக்க தோணும்... ஆமாம் d . r அப்துல்கலாம் யாழ்ப்பணத்தில் நேற்று (23 .1 . 2012 ) யாழ் பல்கலைக் கழகத்திற்கும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் வருகை தந்திருந்தார். முதல் தடவையாக அப்துல்கலாமை பார்க்கப் போறோம் என்ற ஆர்ப்பாட்டம் நம் நண்பர்கூட்டத்தில்................

எனக்கு தெரிந்த அன்று எனது friend  முருகாவுக்கு phone  எடுத்து அப்துல் கலாமை பார்க்க போறம் நீயும் வா காலை 8 .30 க்கு class ல் meet பண்ணுவம் என்று நித்திரையில் இருந்த அவளுக்கு கூறினேன்......

இவ்வாறு ஆரம்பித்த எமது எதிர்பார்ப்பு நேற்று (23 /1 /2012 ) அன்று காலை 9 . 45 மணி போல புஸ் வானமாய் சதறியது.நாங்கள் செய்த தவறினால் எங்கள் media id எங்கள் கைகளுக்கு கிட்டவில்லை. இதனால் sir id இருந்த 5 பேரையும்( casrto ,jana , kamsha ,suji , mareen ) கூட்டிக்கொண்டு சென்று விட்டார். நாங்க 4 பேரும் ( kavi , suganiya , thadsa , gowsi ) sir பார்த்து 2 தடவைகள் போய் எங்களையும் கூட்டிட்டு போகச் சொல்லி கேட்டோம். ஆனால் sir மாட்டன் என்று கூறி விட்டார். பின்னர் நாம் class ல் வந்து அமர்ந்தோம். பிறகு எங்களுக்கு lecture செய்வதற்கு சபேஷ் sir  வந்தார். நாங்கள் வாங்க sir  அப்துல் கலாமை meet பண்ண போவம் என்றேன். உடனே sir ok 11  மணிக்கு அப்துல் கலாமை சந்திக்க போவம் என்றார்.

எங்கள் friends எல்லோரையும் குழுவாக பிரிச்சு விட்டார். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வேலை....ஆனால் நாங்க 5 பேரும் அப்துல் கலாமின் அசைவுகளை photo எடுத்து தருகின்றோம் என்று கூறினோம். sir எத்தனை camera வைத்திருக்கிறீர்கள் என்றார்.நாமும் இருக்கு sir என்றோம். ஆனால் இருந்ததோ 3 camera .......நாங்க எங்க friend  க்கு call எடுத்து camera  இருக்கா என்றோம். அவன் கடைசி நேரத்தில இல்ல என்று கூறினான்.. பிறகு நாங்கள் எல்லோரும் பல்கலைக் கழகத்திற்கு சென்றோம்.


வாசல் எங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உள்ளே சென்றால் அலை அலையாக திரண்டிருந்த மாணவர்களும் அவர்களை தடுப்பதற்காக காத்திருந்த போலீசாரும் என பல்கலைக்கழகமே நிறைந்து வழிந்திருந்தது.

நாமும் கூட்டத்தோடு கூட்டமாக நின்றோம். எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விட வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு இருந்தது. ஆனால் எங்கள் முயற்ச்சி பலிக்க வில்லை. camera வை எடுத்துக்கொண்டு அப்துல்கலாம் வரும் entrence ல் போய் journalist உடன் போய் காத்து நின்றோம்.

வாகன தொடரணியும் வந்தது...எல்லோர் கண்களும் அகல விரிந்தன..... மாணவர்கள் எல்லோரும் அப்துல்கலாமை பார்க்க அருகே வர அங்கே இருந்த பாதுகாப்பு படையினர் அப்துல்கலாமை நெருங்க விடவில்லை. அவ்வளவு ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் அப்துல்காலமை photo எடுக்க எல்லோர் கரங்களும் மேலே எழுந்தன. அதில் எங்கள் கைகளும் ஒன்று...........


பிரபலம் ஒருவரை சந்திப்பது என்றால் ஒரு journalist எவ்வளவு கஷ்டப்படுவான் என்பதை இன்று தான் உணர்ந்து கொண்டேன்.......


சிரமத்தின் மத்தியில் நாங்கள் எடுத்த photo வில் 2 . 3 photo க்களிலே தான் அப்துல் கலாமின் பிரதி விம்பம்...........

entrence ல் இருந்து பின் பக்கத்தில் இருக்கும் வழியால் நானும் கவியும் ஓடிச் சென்று அரங்க நுழைவாயிலில் காத்து நின்றோம். அப்துல்கலாமும் வந்தார்.. பாதுகாப்பு படையினரின் சுற்றி வளைப்புடன்......


அவரை வரவேற்பதற்காக கும்பம் வைத்து விளக்கு கொளுத்தி வைக்கப்பட்டு இருந்தது.நாங்கள் இருவரும் அந்த மேசைக்கு முன்னால் போய் நின்றோம். எங்களுக்கும் முன்னால் இருந்த journalist உம் police  உம் நெருக்கமாக வர வர நாங்களும் பின்புறமாக சென்றோம். 

விளக்கில் இருந்த நெருப்பு என் கையை பதம் பார்த்தது மட்டுமின்றி கவியின் ஆடையையும் பதம் பார்த்தது. எங்களுக்கு பின்னால் இருந்தவர் எங்கள் இருவரையும் முன்னாடி போகுமாறு கூறினார்.  அப்புறம் கலாமும் அரங்கத்துக்குள் சென்றுவிட நாமும் அதன் பின் வந்து தான் கையை பார்த்தோம். தீக் காயத்தினால் கைகள் பொங்கிப் போய் இருந்தன. சிறிது நேரம் காத்திருந்து விட்டு நாங்கள் எடுத்த போட்டோவை பார்த்து விட்டு போய் 1st bench ல் இருந்தோம்.....



function ன் முடிந்ததும் தொடரணியும் வந்தது. அப்துல் கலாமும் வந்தார். நாமும் வழியனுப்பி வைத்தோம்......

அத்துடன் நின்று விடவில்லை அப்துல்கலாமின் பயணமும் அவரை தொடர்ந்த எம் பயணமும்............

பிறகு பல மணி நேர திட்டலின் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தோம்....நாம் 4 பேரும் எப்பிடியாவது நாம் அப்துல் கலாமை சந்தித்து விட்டு தான் வீடு செல்வது என்று.......

அதன்படி அப்துல்கலாமை பின் தொடர்ந்து யாழ் / இந்துக் கல்லூரிக்கு சென்றோம். அங்கு எமக்கு அப்துல் கலாமை சந்திக்க எவ்வித தடையும் இல்லை. காரணம் எமது அறிமுகம் ஊடக மாணவர்கள் என்பதே......அங்கும் அப்துல் கலாமுக்காக கத்து நின்றோம்.......

அப்துல்கலாம் வரும் வேளை நெருங்கியது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாக காத்திருந்தோம் .நேரம் போனது அப்துல் கலாமும் வந்தார். எல்லோருடைய camera க்களும் அவரை படம் பிடிக்க எமது camera க்களும் படம் பிடிக்க தவறவில்லை.வந்திறங்கியவுடன் வெளியில் நின்ற சிறுவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவரும் அவர்களுடன் உரையாடிவிட்டு சென்றார்.


 இந்துக் கல்லூரிக்கு வந்த அப்துல் கலாம் நினைவுக் கல்  ஒன்றை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் இந்துக் கல்லூரி கேட்போர் கூடத்துக்கு சென்றார்.

பல்வேறு பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் பின் கேட்போர் கூடத்துக்கு சென்றோம். அவருடைய உரையை கேட்டுக்கொண்டு photo வும் எடுக்க தவறவில்லை.

கலாமின் பேச்சு அவரைப் போல இயல்பாகவும் மாணவர்கள் விரும்பும் வகையிலும் அமைந்திருந்தது. மாணவர்கள் கேள்வி கேட்டனர்.....கலாமிடம் குறிப்பாக தரம் 6 மாணவன் உங்களை போல வர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டமை அனைவரது பாரட்டையும் பெற்றது.

அப்துல் கலாமை சந்தித்த பிறகு தான் எங்களுக்கு sir meeting வைப்பது நினைவுக்கு வந்தது..... எல்லோரும் ok sir வந்திருப்பர் வாங்க போவம்  என்றோம்.. meeting 3 மணிக்கு நாங்க போனதோ 5 மணிக்கு.... class உம் வந்தோம். meeting உம் தொடங்கி இருந்தது. sir கேட்டார் அப்துல் கலாமை பாத்திடின்களா  என்றார்.  நாங்களும் ஆமாம் என்றோம். பிறகு நடந்த எல்லாவற்றையும் சொன்னோம். sir அதுக்கு முயற்ச்சி திருவினை ஆக்கும் என்றார்........



Thursday, January 19, 2012

பசுமையான தருணங்கள்............

படிக்கின்ற காலத்தில் நண்பர்களுடன் இருக்கும் தருணங்கள் வாழ்கையில் மறக்கமுடியாதது. அதிலும் பத்து நாட்கள் என் நண்பர்களுடன் கழிந்த பொழுதுகள் எத்தனை காலம் சென்றாலும் பசுமையான நினைவுகளாக இருக்கும்.

கனாக்காணும் காலங்கள் கூட எமது கல்லுரிக்காலத்திடம் கையேந்தும். 



எமக்குள் நடந்த சின்னச்சிறு சண்டைகள் இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கும்..........


தம்பியை விட்டு பிரிகின்றோம் என்ற கண்ணீருடன் ஆரம்பித்தது நண்பர்களுடனான என் பயணம்..............

காலை வேளையிலே தூக்கம் எம் கண்களை வருடிக்கொண்டிருக்கும் நேரத்தல் எம் தாய் கூட தேனீர் கொண்டு வந்து எழுப்புவாரா என்பது சந்தேகம் தான். ஆனால் எம்மோடு படிக்கும் எம் சக மாணவன் சுரேஷ் எமது room கதவினை தட்டி tea வந்திட்டு வாங்க என்றே கூப்பிடுவான். எல்லா மாணவர்களும் ready ஆனா படி தான் tea எடுக்க வருவார்கள். ஆனால் எமது அறையில் மட்டும் நித்திரையில் இருந்து எழும்பிக்கொண்டு செல்வர்கள். நான் அந்த நேரத்திலும் போர்வையினை போத்திக்கொண்டு தூங்கிய படிதான் இருப்பேன்.ஆனால் எனக்கும் சேர்த்து tea  கொடுத்து விட்டு தான் செல்வான். தனது cupல் தட்சா வாங்கி வைப்பாள்.  tea  நான் குடிப்பதில்லை. ஆனாலும் எனக்கு எப்போதும் வாங்கி வைப்பார்கள் என் நண்பர்கள்.


 எமது ஆசிரியர் காலை வேளையிலே 7.30 மணிக்கே தயாராகி கீழே வந்து விட வேண்டும் என்று கூறுவார். ஆனால் எல்லோரும் தயாராகி சென்றாலும் எமது roomலும்  எம் பக்கத்து room ல் இருந்தும் யாரும் செல்லமாட்டார்கள். எல்லோரையும் sir வரட்டாம் என்று சொல்லிக்கொண்டு எம்  roomஇணை தட்டும் போதுதான் நான் கண் முழிப்பேன். என் நண்பிகளில் மிருஷா மட்டும் முதலே readyயாகி விடுவாள். ஆனால் முருகாவும் தட்சாவும் 7 மணிக்கு தான் எழும்பி நின்று  readyஆவதற்கு சண்டை பிடிப்பார்கள். என்னை எப்போதும் மிருஷா தான் எழுப்பி விடுவாள். நானும் அவசர அவசரமாக தயராகுவேன். ஆனாலும் என் நண்பர்கள் என்னை விட்டுட்டு தனியாக busக்கு  செல்ல மாட்டார்கள். நாங்கள் புறப்பட்டு செல்லும் வாகனத்தின் Driver Horne அடிக்கும் வரை எமது அறையில் இருந்து யாரும் வெளியே செல்ல மாட்டோம்.பெரும் பாலும் காலை உணவு busக்குள் தான்.  busகுள்ளும் அருகருகே தான் இருப்போம். ஏறியவுடன் நானும் மிருஷாவும் ஒருவர் மீது ஒருவர் தூங்கி விடுவோம். எனது Friend முருகா ரொம்ப அடாவடி தனம் பண்ணுவாள். நான் மிருவின் மடியிலே தூங்கினால் என்னை தட்டி எழுப்பி அவளின் தோள்ள தூங்கு என்பாள்.......இப்போதும் நாங்கள் சொல்லுவோம் எங்கள் பக்கத்தில் இருந்து வரதே என்று...............



தூக்கம் இல்லாத நாட்களிலும் வழமை போல நாங்கள்  busல் செல்லும் போதும் நாம் சும்மா இருப்பதில்லை. ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். ஒரு song மற்றவர்களுக்கு பிடித்திருந்தாலும் எங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் Driverகூட விட்டு வைப்பதில்லை.  பாட்டை  மாத்துமாறு கூச்சலிடுவோம்.    Driver தனக்கு பிடித்த பழைய பாடல்களைத்தான் அதிகமாக போடுவார்.......நாம்  அவருக்காக ஒரு பாடல் பாடுவோம். "டப்பா டப்பா busப்பா.......பாட்ட கொஞ்சம் மாத்துப்பா" அவரோ வேண்டா வெறுப்பாக மாத்துவர்..... a.c  ஒத்துக் கொள்வதில்லை இதனால் a.c போடா வேண்டாம் என்றும் கத்துவோம்.


இரவு நேர கலந்துரையாடல் 12 மணிக்கு முடிந்தாலும் நாம் தூங்குவது 3,4 மணிக்கு தான். அதுவரையிலும் மொட்டமாடியில் இருந்து அரட்டை அடித்து கொள்வோம். தூக்கம் தொலைத்த இரவுகள் தாண்டி விடியும் பொழுதில் களப் பயிற்சிக்கு செல்வோம். அப்போதுதான் எம் உற்ற தோழனான உறக்கம் எம் கண்களில் வரும். அங்கும்  நாங்க தூங்குவோம் ஆனால் மற்றவர்கள் தூங்கினால் அவர்களை photo எடுத்து சிரித்துக்கொள்வோம். 


சாப்பிடும் நேரத்திலும் எங்கள் பழக்கம் தொடர்ந்தது. நானும் முருகாவும்  மிருசாவும் பகிர்ந்து தான் சாப்பிடுவோம். ஹோடேளிலும் அப்படித்தான்.     2க்கு ஆர்டர் செய்வோம்.3வரும் சாப்பிடுவோம். ஆனால் முதல் 2 நாட்கள் 3க்கு ஆர்டர் செய்தோம் சாப்பிட்டது 2தான்.   மீதியை parcel  செய்து கொண்டு வந்தோம்......எம் roomக்கு வந்து நானும் தட்ஷாவும் தூங்கின பிறகு மிருஷாவும் முருகாவும் மட்டும் இரவு எத்தனை மணி நேரம் சென்றாலும் சாப்பிட்டு தான் தூங்குவார்கள். அடுத்தநாள் morning செல்லுவார்கள்......



எங்க எல்லோருக்கும்  phone வரும். யார் எடுக்கிறாங்க எடுக்கிறாங்க என்றது இல்லை. அடித்து பிடித்து answer பண்ணுவம் மற்றவர்களின் phoneகளை. ஆனால் எமது phoneக்கு call  வந்தால் ஒவ்வொருவரும் பேசாமல் இருக்க வேண்டியதுதான். ஏன் என்றால் answer செய்வது மற்றவர்கள் தான். எங்க roomல் மட்டும் யாரா இருந்தாலும் போன் கதைக்க கூடாது என்று கூறியுள்ளேன். ஆனால் எல்லோரும் அதைகேட்டு வெளியே சென்று கதைப்பார்கள். நான் மட்டும் எனக்கு போன் வந்தால் ரூமில் இருந்து கதைப்பேன். என் friends சொல்லுவார்கள் நீ  மட்டும் கதை என்று...அந்த அளவுக்கு இருக்கும்......எங்கள் room.



எந்த நிலையில் இருந்தாலும் நாம் photo எடுப்பதென்றால் மறுப்பு சொல்வதே இல்லை. நாம் தூங்கிக் கொண்டு இருக்கும் நேரம் மிருஷா எழும்பி நாம் எப்படி தூங்குகிறோம் என்பதை photo எடுத்து  காட்டுவாள் அதிகாலை.........என்னதான் 

2double bed இருந்தாலும் தூங்கினது என்னமோ ஒருவர்மீது ஒருவர் தான் கால்களினால் மற்றவருக்கு உதைத்து கொண்டு தூங்குவோம். ஒழுங்காக bedல் தூங்கவே மாட்டோம். எனது காலில் முருகாவின் தலையும் முருகாவின் காலில் எனது தலையும் இருக்கும் காலையில்...அது போல தான் மிருஷாவும் தட்ஷாவும் தூங்குவது.............


இரவு நேரத்தில் எத்தனை மணி சென்றாலும் தலைக்கு தோய்ந்து விட்டு தான் நானும் முருகாவும் தூங்குவோம். ஆனால் தலையை மட்டும் கழுவிக்கொண்டு வந்துவிடுவோம். இதனால் தட்சாவிடமும் மிருஷாவிடமும் நாம் வதைபட்ட சம்பவங்கள் பல....எல்லோரும் உறங்கும் நேரத்திலும் கூட தட்ஷாவும் முருகாவும் ஆடைகளை துவைத்த சந்தர்பங்களும் உண்டு......எனக்கு பெரும்பாலும் மிருஷா ஆடைகளை துவைத்து காயப்போட்டு rooக்குள் எடுத்துக்கொண்டு வந்தும் வைப்பாள். 



நாம் வெள்ளவத்தை கடக்கரைக்கு சென்றது அமாவாசையோ பருவம் அன்றுதான். அதனால் எங்க சபேஷ்sir எங்களை கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று கூறினார். ஏனென்றால் அன்று அலை அதிகமாக அடிக்குமாம் என்றார். சார் சொன்ன அடுத்த நொடியே நாம் 4பேரும் sirருக்கு hi சொல்லிக்கொண்டு கடல் அலைகளுடன் சங்கமித்தோம்.அதைக்கண்ட sir
ரொம்ப பயந்திட்டார்... எல்லோரும் வாங்க roomக்கு போவம் என்று கூறினார். நாமோ 5 நிமிடம் sir என்று சொலிக்கொண்டு அலைகளுடன் விளையாடினோம். ஒவ்வொருவரது கைகளை பிடித்துக்கொண்டு கடற்கரையில் இருந்தோம். அலைகள் வந்து எம்மை இழுத்துக்கொண்டு செல்லும்...எங்களுக்கோ விளையாட்டு.  

நாம் மட்டும் நனைந்தால் போதுமா கவி துவாரகி இருவரையும் சேர்த்து இழுத்து விழித்தினோம். மண்ணினால் எறிந்து விளையாடினோம்...sir வந்து வாங்க எல்லோரும் போவம் என்று கூட்டிகொண்டு சென்று விட்டார்.......roomமுக்கு வந்த பின்தான் தெரிந்தது நாங்கள் 4 பேரும் கடல் மண்ணை எல்லாம் கொண்டு வந்தது........




எங்கள் 3வரிடமும் தான் காசுப் பொறுப்பு தந்தது. ஆனால் நாம் இரவு கணக்கு பார்க்கும் போது காசு சரியாவே இருக்காது. நானும் முருகாவும் எங்கள் காசுகளை போடுவோம்....அப்புறம் இருந்து நீ சரியாய் கணக்கு எழுதி வைக்கவில்லை என்று சண்டைகள் பிடிப்போம்........எங்களுக்குள் நடந்த சிறு சண்டையும் அதுதான்  ஒரு சமயம் எல்லோர் roomக்கும் போய் ஒவ்வொருவரிடமும் 10ருபா வேண்டின சமயமும் உண்டு...மிருஷா மட்டும் யார்கிட்டயும் காசு வேண்ட போகவே மாட்டாள்....அதையும் சொல்லி சிரிப்போம்......


நாங்க கண்காட்சி பார்க்க களனிக்கு சென்றிருந்தோம். அங்கு தட்சா முருகா இருவரையும் விட்டு நானும் மிருஷாவும் பிரிந்து விட்டோம்.......அப்புறம் முருகாவை கண்டு பிடித்தோம்.... ஆனால் அவளுடனும் இருந்தது சிறிது நேரம் தான். எல்லோரையும் ஒரு roomக்குள் வாங்க படம் போடப்போறம் என்றார்கள். முருகா சென்றுவிட்டாள். ஆனால் நானும் மிருஷாவும் போகவே இல்லை. நாங்க போகாததும் சந்தோசம் தான். ஏனென்றால் முருகா படத்த பார்த்து அழுதாளாம் என்று எங்க மற்ற friends  சொன்னங்க......நாங்க வெளியல நின்ற நேரம் ஏதோ ஒரு பாதையால போய் ஏதோ ஒரு பாதையால வந்தோம். அந்த நேரமும் ice cream குடித்துக்கொண்டும் சோளம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம்........பிறகு எல்லோரும் busக்கு சென்று விட்டார்கள். நாங்கள் இருவரும் கடைசி நேரத்தில் போய் சேர்ந்தோம்.  


பயணத்தில் நடந்தது பல உங்களுடன் பகிர்ந்ததோ சில..........உங்களுக்கும் இவ்வாறான பல சம்பவங்கள் நடந்திருக்கும். நீங்களும் இப்படியான பசுமையான நினைவுகளை நினைத்து பாருங்கள்..............ஒவ்வொரு friendஉம் தேவை வாழ்கையின் பசுமையான நினைவுகளுக்கு.......




Friday, January 13, 2012

தமிழர் திருநாளம் தைத்திருநாள்!

தமிழ் இனத்திற்கென சிறப்பாக உள்ளதொரு பண்பாடு நன்றி பாராட்டுவது. தம்மை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றிப் பெருக்கோடு விழாவெடுத்து பொங்கலிட்டுப் படைத்துஅகமகிழ்வது தமிழர் பண்பாடுஇதற்காகவே தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

கடின உழைப்பின் அருள்பாலிக்கும் சூரியனை வணங்கிவழிபிறக்கும் என்ற நம்பிக்கையில்உழைப்பின் பலனை நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் ஒரு விவசாயிக்கான நாளாயன்றிமண்ணை நம்பியும் வானை நம்பியுமே வாழ்ந்த முன்னைத் தமிழனின் வழித்தொடராய் முழுத்தமிழனின் திருநாளே தைப்பொங்கல் நன்நாள். சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை  பெய்யவும்நாடு செழிக்கவும் பெண்கள்  இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமிபகலவன்/பரிதிஉதவிய கால்நடை போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.

தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர்.  புதுப்பானை பலர் வாங்குவர். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர்.  புதுப்பானையில் புதுஅரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.

முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம்வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள்சாணத்தில் பிள்ளையார் பிடித்தும்வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன்மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

இது தமிழ்நாடு,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல்உழைக்கும் மக்கள் இயற்கைக்கும்மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.



மாட்டுப்பொங்கல்:

தைப் பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல்  அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். 

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி  குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இந்தியாவில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.