சிறுவயது முதல்கண்ணை இமை காப்பதுபோல அந்திபகலாய்ஆதரித்து இன்று ஆதரிக்கயாருமின்றி பலதுன்பங்களுடனும் ஏக்கங்களுடனும் வாழும்எம் உறவுகளாம்முதியவர்களின்நிலையை யார் தான்கண்டு கொள்கிறார்கள்.
பத்து மாதம் வயிற்றிலேசுமந்தாள் அன்னை.நெஞ்சிலே சுமந்தார்தந்தை. இவர்களைசுமக்க யாரும் இல்லாமல் முதியோர் இல்லங்களே இருக்கின்றனசமுதாயத்திலே....
வாழ்க்கைக்கு வித்திட்டு வாழ்வாங்கு வழிகாட்டி வாழ வைத்ததொழுகைகுரியவர்களை இன்றைய தலைமுறைகள்கண்ணெடுத்தும் பார்க்காமல் வயோதிபர் என பட்டம் சூட்டி இன்றுவயோதிபர் இல்லங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.
எமது உறவுகளை வயோதிபர் எனவும் பாரமாகவும் நினைக்கும்பிள்ளைகளை அவர்களும் தமக்கு பிள்ளைகள் பாரம் எனநினைத்திருந்தால் இவர்கள் தான் எங்கே? முதியோர் இல்லங்கள்தான் எங்கே?
அன்னையாய் தன்தையாய் அறிவுக்கும் ஆசானாய் இனிய கதைகள்சொல்லும் பாட்டனாய் பாட்டியாய் பக்குவாமாக பல விடயம் கூறிவிட்டு இன்று பாதை தெரியாமல் தவிக்கும் முதியவர்கள் ஏராளம்.
எமது பிள்ளைகள் இவர்களின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும்என நினைத்து ஓடியோடி உழைத்து ஓடாய் தேய்ந்து சமுதாயத்தில்நல்ல நிலையில் வைத்தவர்களுக்கு செய்யும் கைம்மாறு நன்றிகடன் என்ன தெரியுமா? அவர்களை முதியோர் இல்லங்களுக்குஅனுப்பி வைப்பதுதான். எல்லோரும் ஒருகணம் சிந்திக்க வேண்டும்எம் கைபற்றி நடை பயில வைத்தவர்களை அவர் கோலுன்றி வரும்பொது பரிகாசம் செய்வதும் தூற்றுவதும் அவர்களது மனம்நோகும்படி நடப்பதும் போன்ற காரியங்களை நாம் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதனால் அவர்களின் மனது எவ்வளவு வேதனைப்படும்என்பதனை நீங்களும் வயோதிபர் ஆகும் காலத்தில் உணர்ந்துகொள்ள நேரிடும். உறவுகள் மீது இருந்த பற்றும், பாசமும்தற்போது பணத்தின் மீது சென்றுவிட்டது. வாழ்க்கைக்கு பணம்தேவை தான். ஆனால், பணமே வாழ்க்கையாகி விடக் கூடாதுஎன்பதை உணர வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை வளர்த்துஆளாக்குவதற்கு எத்தனை தியாகங்களை செய்கின்றனர் என்பதை எல்லாம் எண்ணிப் பார்த்து அவர்களிடம் பாசத்தோடும்,அன்போடும் நடந்து கொள்ள வேண்டும்.
சிலர் உயர் கல்வி பயில்வதற்காக வெளி நாடுகளுக்குச்செல்கின்றனர். கல்வி பயின்ற பின் அங்கேயே நல்ல வேலை தேடிக்கொள்கின்றனர். பின்னர் திருமணம் செய்துகொண்டு அங்கேயேகுடும்பத்துடன் இருந்து விடுகின்றனர்.வெளிநாடுகளின் கலாசாரதாக்கத்தால், பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற கோட்பாடுமறையத்தொடங்கியுள்ளது. இதன் விளைவாக வயதான தாய்,தந்தையர் முதியோர் இல்லத்தையே தங்கள் சொந்த இல்லமாகநினைத்து வாழ வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
ஒவ்வொரு தாய் தந்தையரும் தமது பிள்ளைகளை பெற்றுவளர்க்கும் போது கடைசிகாலத்தில் தன்னுடன் இருப்பான் எனநினைத்து தான் பாசத்தை ஊட்டி வளர்க்கிறார்கள். அவர்களுக்குஎத்தனை கனவுகள் இருக்கும் ஆனால் அதை எல்லாம் ஒருபொருட்டாக மதிக்காத இன்றைய தலைமுறை தமதுஆசைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பெற்றோரும்மகனின் விருப்பம் எதுவோ அதற்கேற்றால் போல நடக்கின்றனர்.பிள்ளைகளும் ஒருகணம் சிந்திக்க வேண்டும் பெற்றோரை தனியாகதவிக்க விட்டு விட்டு வெளிநாட்டுக்கு செல்வது அவசியம் தானாஎன்று?
ஒவ்வொரு முதியோர் இல்லங்களில் இருக்கும் வயோதிபர்களின்கண்ணீருக்கு பின்னால் எத்தனை கதைகள் இருக்கும். எவ்வளவுஏக்கம் இருக்கும். பேரப்பிள்ளைகளை கொஞ்சி விளையாடும்நேரத்திலே இந்த முதியோர் இல்லங்கள் அவசியம் தானா? தாய்தந்தையரை பாரம் என நினைப்பவன் இந்த பூமியிலே வாழ்ந்துஎதனை சாதிக்க போகிறான்?
" தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை"
என்ற கருத்தை எல்லோரும் மனதிலே வைத்திருந்தால் இந்தமுதியோர் இல்லங்களுக்கான தேவை இன்று இல்லை. அன்புஎன்றால் அம்மா பாசம் என்றால் தந்தை என்று எல்லோரும்கூறுவார்கள். இது வாய்வார்த்தை என்பதனை இந்த சமுதாயத்தில்இருக்கும் முதியோர் இல்லங்களை பார்த்தால் தெரிந்துவிடும்.
கடைசி காலத்தில் எந்த ஒரு பெற்றோரும் தமது பிள்ளைகளுடனும்பேரப்பிள்ளைகளுடனும் தான் கழிக்க விரும்புவார்கள். ஆனால்இன்று யாரும் அற்றவர்களாய் வாய்பேச மடந்தையர்களாய்கண்மூடி தனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்என்று சொன்னால் மிகையாகாது.
இந்நிலை மாற வேண்டும். முதியவர்களை இன்பமுற வாழ வைக்கவேண்டும். நம்மைப் பெற்றவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீரைபார்ப்பதற்கு நாம் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.முதியோர் இல்லங்களே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.



5:59 AM
sugani


