flashvortex

Thursday, June 25, 2015

கிங் ஆஃப் பாப் மைக்கேல் ஜாக்சன்






மைக்கேல் ஜாக்சன் பாப் உலகின் மன்னன் ,நாடுகளை கடந்த கலைஞன்,இசையாலே இதயங்களை கரைத்தவர் . மைக்கேல் ஜாக்சன், இந்தியானா மாகாணத்தின் கேரி நகரில் பத்து குழந்தைகள் உள்ள அமெரிக்க ஆப்ரிக்க குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக பிறந்தார் ..

அப்பா ஸ்டீல் ஆலையில் வேலைப்பார்த்து வந்தார் . மொத்தம் ஐந்து சகோதரிகள்,நான்கு சகோதரர்கள்,ஒரு சகோதரன் பிறந்த சில காலத்திலேயே இறந்து விட்டான். ஜாக்சனின் இளமைக்காலம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை . அவரின் தந்தை ஜோசப் ரொம்பவும் கண்டிப்பானவர். அடிக்கடி பெல்ட் அடி பட்ட அனுபவம் ஜாக்சனுக்கு உண்டு .அப்பாவை பார்த்தாலே வாந்தி எடுத்து விடுகிற அளவிற்கு அப்பாவின் மீது பயம் உண்டு . ஆனால் தான் வாழ்க்கையில் பெரிய அளவில் மிளிர்ந்ததற்கு காரணம் அவரின் அப்பாவின் கண்டிப்புதான் என நினைவு கூர்வார்.

சுட்டிப்பையனாக ஐந்து வயதிலேயே மேடை ஏறி பாடல் பாடிய அனுபவம் உண்டு ஜாக்சனுக்கு. தன் அண்ணன்மார்கள் நடத்தி வந்த ஜாக்சன் ப்ரோதேர்ஸ் இசைக்குழுவில்தான் முதன்முதலில் பாடினார் . அந்த குழுவில் இரண்டே வருடத்தில் முன்னணி பாடகராகவும் உயர்ந்தார் ,அப்பொழுதே நன்றாக நடனமும் ஆடுவார் .இளம் வயதிலேயே குறும்புக்காரர். அக்காவின் ஆடைக்குள் சிலந்திகளை போட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்.
இளம் வயதில் பல்வேறு பாடல்களை பாடி மாபெரும் புகழை இவர்களின் இசைக்குழு பெற்றது .அதன் விளைவாக மொடவுன் ரெகார்ட்ஸ் எகிற இசைக்குழுமம் இவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. அங்கே பல்வேறு ஹிட்களை தந்தார்கள் இவர்கள் .அமெரிகாவின் டாப் நாற்பது ஹிட்களில் தொடர்ந்து அவர்களின் பாடல்கள் இடம்பெற்றன .அதில் ஜாக்சனின் ஆதிக்கமே அதிகம். எனினும் மூன்றே ஆண்டுகளில் அவர்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார்கள்.
படைப்பாற்றலுக்கும் ,புதிய முயற்சிகளுக்கும் இடம் தராததே காரணம் என ஜாக்சன் பின்னாளில் இந்த பிரிவை பற்றி குறிப்பிட்டார் இதற்கு பிறகு எபிக் ஸ்டுடியோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் ஜாக்சன். இங்கேதான் கிவின்சி ஜோன்சின் அறிமுகம் கிடைத்தது .பல்வேறு ஆல்பங்களை அவரே பிறகு தயாரித்தார் . அவர் செல்லமாக ஜாக்சனை ஸ்மெல்லி என அழைப்பார். ஓயாது உழைக்க வேண்டும் என்பதை இந்த காலங்களில் உணர்ந்தார் மைக்கேல் ஜாக்சன் .
தன் முதல் ஐந்து இசைக்கோர்வைகளில் தன் குரல் மின்னி, மவுஸ் மாதிரி இருந்ததாக தன்னையே சுய விமர்சனம் செய்துகொண்டார். ஜாக்சன் ஏகத்துக்கும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர் .நடனப் பயிற்சியின் பொழுது மூக்கையும் உடைத்து கொண்டார் . பெப்சிக்காக ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட பொழுது தீப்பற்றி உடல் எல்லாம் பலத்த தீக்காயங்கள்.  விட்டிலிகோ எனும் உடல் நிறமிக் குறைபாடு தாக்கியது . அத்தனையும் அடிக்கடி அறுவை சிகிச்சைக்கு உள்ளாக்கியது. என்றாலும் இவை எதுவும் அவர் இசை நிகழ்வில் வெளிப்பட்டது இல்லை. ரோபோட் டான்ஸ் மூன் வாக் என இவர் அறிமுகப்படுத்திய நடன யுக்திகள் இளைஞர்களை இன்றைக்கும் கட்டி போடுகின்றன.
புவி ஈர்ப்பு விசையை மீறி நினைத்தவாறு கால்களை நகர்த்த உதவும் பூட்சை தானே உருவாக்கினார் .அதன் பேடன்ட்டை பதிவும் செய்து கொண்டார். இதை அணிந்து கொண்டு முன்பக்கம் சாதாரணமாக வளைவதை விட அதிகமாக வளைய முடிந்தது அவரால் .

இதனால் தான் ரப்பரை போன்ற வளைக்கிற ஸ்டெப்ஸை ஜாக்சன் போட முடிந்ததாக சொல்வார்கள். 
மைக்கேல் ஜாக்சனின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு 1982.  இந்த வருடம்தான் ஸ்பீல்பெர்கின் ஈடி படத்திற்க்கான ஆடியோ கோர்வையை தன் குரலில் பதிவு செய்தார் ஜாக்சன். இதற்காக கிராமி விருது அவருக்கு கிடைத்தது.

அதே வருடம் வெளிவந்த ஜாக்சனின் த்ரில்லர் வெளிவந்தது. இன்றைக்கும் உலகில்;அதிகமாக விற்கும் இசை ஆல்பம். இசை உலகின் மன்னன் என ஜாக்சனை இதற்கு பின் தான் கொண்டாடத்தொடங்கியது உலகம், த்ரில்லர் ஆல்பத்திற்காக எட்டு கிராம்மி விருதுகளை ஜாக்சன் அள்ளினார் . இது முப்பது ஆண்டுகளாக அப்படியே உள்ள சாதனை.
எய்ட்ஸ் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏராளமான நிதி திரட்டி உள்ளார். தன்னுடைய மேன் ப்ரம் தி சிங்கள் பாடலின் மூலம் வந்த வருமானத்தை ஆதரவற்றோருக்கு தந்ததில் தொடங்கியது இது. கடைசி வரை ஏழை மக்களின் துயரங்களை நினைவு படுத்தும் வகையில் கருப்பு பட்டை ஒன்றை கையில் அணிந்து இருந்தார் . ஆப்ரிக்காவின் பகுதிகளுக்கு பயணம் போன பொழுது மக்களோடு ஏகத்துக்கும் அளவளாவி அன்பு காட்டினார்.அவரை தங்கள் மண்ணின் மைந்தன் என கொண்டாடினார்கள் அவர்கள் , டிஸ்னி நிறுவனத்திற்காக கேப்டன் EO என்கிற குழந்தைகள் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் . அந்த படம் அவரின் மரணத்திற்கு பின் மீண்டும் அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட்களில் திரையிடப்பட்டது .தன் வீட்டில் மிகப்பெரிய தீம் பார்க் ஒன்றை உருவாக்கி அதில் பல்வேறு ஆதரவற்ற குழந்தைகளை விளையாட செய்தார் . அதற்கு முக்கிய காரணமாக எனக்கு கிடைக்காத அழகான இளமைக்காலம் இவர்களுக்கு வைக்கட்டுமே என்றார் தன் சுயசரிதயை மூன்வாக்கர் என்கிற தலைப்பில் வெளியிட்டார் .அதில் கண்ணீர் ததும்ப தன் வாழ்வில் பட்ட துன்பங்களை சொல்லி இருப்பார் .1992 இல் வில் சேரில் அமர்ந்தப்படியே விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் பாடிய பாடல் தான் “ஹீல் தி வேர்ல்ட்”(உலகின் காயத்தை ஆற்றுவோம் )இசை நிகழ்வுக்கான பயிற்சின் பொழுது ஏற்பட்ட காயத்தால் இப்படி வீல் சேரில் அமர்ந்து பாட நேரிட்டதாக சொன்ன பொழுது உலகம் உணர்ச்சி வசப்பட்டது .


அமெரிக்காவின் நூலகம் ஒன்றில் பல காலமாக ஜாக்சன் புத்தகங்களை திரும்ப தராததால் பத்து லட்சம் டாலர் அளவிற்கு அபராதம் உயர்ந்தது .அந்த நூல்களை அவரின் கையொப்பத்தோடு திருப்பி தந்தால் மட்டுமே போதும் என அந்த நூலகம் அறிவித்தது ரகளையான க்ளைமாக்ஸ் ஜாக்சனின் உலகின் காயத்தை ஆற்றுவோம் ஐநா சபையால் உலக பாடலாக அங்கீகரிக்கப்பட்டது .அவரின் எர்த் சாங் உலக சுற்றுச்சூழல் தினத்தின் அதிகரப்போர்வ பாடலானது .தென் கரோலினா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில கீதமும் மைக்கேல் ஜாக்சனின் படைப்பு தான் வாழ்கையின் இறுதி காலங்களில் கடன் சுமையால் பெரிதும் கஷ்டப்பட்டார் .
குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளக்கியதாக வழக்குகள் கோர்ட் வரை சென்றன. அவர் அவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெற்றார்.  அந்த கடன்களை தீர்க்கவும் ,ரசிகர்களை சந்திக்கவும் ஐம்பது இசை நிகழ்வுகளை உலகம் முழுக்க நடத்த திட்டமிட்டார் .அதற்கான பயிற்சியில் இருக்கும் பொழுது அதிகமாக வழி நிவாரணியான மருந்தை டாக்டர் தர, உயிர் பிரிந்தது ஜாக்சனுக்கு. .
உலகமே கண்ணீரால் அந்த இசை நாயகனுக்கு பிரியா விடை கொடுத்தது . உலகை எவ்வளவோ உற்சாகப்படுத்தினாலும் தன் வாழ்க்கை முழுக்க சோகத்தால்தான் நிரப்பிக்கொண்டார் கிங் ஆப் பாப். தன்னைப்பற்றி கவலை கொள்ளாமல் சுற்றி இருப்போருக்காக ஓயாமல் ஓடி ஓடி அவர் ஓய்ந்து போனது கசப்பான க்ளைமேக்ஸ்.
“எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பது முக்கியமில்லை. உன்னுடைய இதயத்தால் அன்பால் பிறரை எவ்வளவு நிறைக்கிறாய் என்பதே முக்கியம் !” என்று சொன்ன மைக்கேல் ஜாக்சனை "நீள்முக்கு கொண்டிருக்கும் உன்னையெல்லாம் யார் பார்ப்பார்கள் ?" என்று கேட்டார்கள். "மின்னி மவுஸ் போல இருக்கிறது அவனின் குரல் " என்றும் சொன்னார்கள்.
விட்டிலிகோ வந்து செய்த பிளாஸ்டிக் சர்ஜரியை எல்லாம் அழகுக்காக செய்கிறார் என்று காயப்படுத்தினார்கள். "உலகின் காயங்கள் ஆற்றுவோம் !" என்று இசைத்தார். "நாம் தான் உலகம் !" என்று எல்லாரையும் அன்பு செய்தார் அவர். உலகை நேசித்த அதன் காயங்களை ஆற்ற இசையால் பிறப்பெடுத்த கிங் ஆப் பாப்பின் நினைவு நாள் இன்று

Monday, June 4, 2012

ஏக்கங்களுடன் வாழும் தும்பளை கிழக்கு மக்கள்.




பிரச்சனைகள் எல்லோர்க்கும் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே இருக்கும். இதற்கு மாறாக பிரச்சனைகயையே வாழ்க்கையாக கொண்டு வாழ்கின்றனர் தும்பளை கிழக்கு மக்கள்.
பருத்தித்துறையில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்து அமைந்திருக்கின்றது தும்பளை கிழக்கு கிராமம். இங்கு 389 குடும்பங்கள் வாழ்வாதார வசதிகள் இன்றி வசித்து வருகின்;றமை கவலைக்குரிய விடயமாகும். இக் கிராமம் அதிகமான பிரச்சனைகளை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளன. இக் கிராமமானது 2004ம் ஆண்டு சுனாமியின் போது பாதிக்கப்பட்டது. இது ஒரு கரையோர குடியிருப்பாகும்.
இவர்களுக்கான வாழ்விட வசதிகளை பல தனியார் நிறுவனங்களான தென்னிந்திய திருச்சபை, போரூட், அலைன்ஞ், கெக்டப், ;யுடினட்ஸ் போன்ற பல நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருந்தன. இதில் அலைன்ஞ் நிறுவனம் கட்டிக் கொடுத்த வீடுகள் இன்னும் பூரணமாக முடியவில்லை என இப் பகுதி மக்கள் தெரிவித்தகர். இதனால் இக் கிராமத்தில் வசிக்கும் 58 குடும்பங்கள் மலசலகூட வசதிகள் இன்றியும் 60 குடும்பங்கள் கிணறு வசதிகள் இன்றியும் சிரமப்பட்டு வருகின்றன.

வீடு ஒன்றுக்கு அடிப்படை வசதிகள் என்பது முக்கியமானதொன்றாகும். கிணறு வசதிகளைவிட மலசலகூட வசதிகள் மிக முக்கியம். ஆனால் அவைஇன்றியே இக் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அலைன்ஞ் நிறுவனத்தோடு  நீங்கள் தொடர்பு கொள்ளவில்லையா? என்று கேட்ட போது  தும்பளைக்கிழக்கு கிராமத்தைத்சேர்ந்த தயாளன் கூறுகையில் 'அலைன்ஸ் நிறுவனம் வீடு கட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நாளிலே இடையில் விட்டு சென்றுவிட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக எந்த வித தொடர்பும் இருக்கவில்லை. இதனால் பத்திரிகையில் செய்திகளை வெளியிட்ட பின்னார் மீண்டும் வந்து குறையாக இருந்த வீட்டை முடித்து தருகின்றோம் என்றார்கள். சொன்னது மட்டும் தான் மீண்டும் எந்த வித தொடர்பும் இன்றி சென்று விட்டனர்'. என்று கூறினார்.

இங்கு இருக்கின்ற வீடுகளை பாருங்கள் கிணறும்இல்லை, மலசலகூடமும் இல்லை இப்படி எத்தனை வீடுகள் இருக்கின்றது. ஏன்று கூறிய படி கிராமத்தில் வசிக்கும் துரையப்பா அன்னலிங்கம் வந்தாhர். 'சுனாமிக்கு முன்பு எங்கள் வீடுகளிலும் எல்லா வசதிகளுடனும் தான் இருற்தது. தற்போது எதுவும் இல்லை கிணறு, மலசலகூடம் இல்லை என்றால் கஸ்ரம் தானே. ஏங்களுடைய குடும்பம் கடற்தொழிலையே நம்பியுள்ளது. செய்கின்ற தொழில் எனண்ணெய் காசக்கு போய்விடுகின்றது. சுhப்பாட்டிற்கே கஸ்ரம் இப்படி இருக்க எவ்வாறு நாம் கிணற்றையும் , மலசலகூடத்தையும் கட்டுவது' என்று கேள்வி எழுப்பினார்.

இதே கிராமத்தை சேர்ந்த 28 வயதுடைய தீபனா தயாளன் கூறுகையில் 'நாங்கள் 05 பேர் எங்களுடைய வீட்டுக்கும் கிணறும், மலசலகூடமும் இல்லை பக்கத்து வீட்டுக்கு தான் செல்வோம். 3,4 மாதங்களுக்கு முன்பு iஉசஉ நிறுவனம் பார்த்து கிணறு மலசலகூட வசதிகள் இல்லாதவர்களின் தொகையை எடுத்துச் சென்றுள்ளார்கள். எங்கட கஸ்ரங்களை iஉசஉ நிறுவனமாவது தீர்த்து வைக்குமா' என்ற ஏக்கத்துடன் கூறி முடித்தார்.
ஒரு வீட்டிற்கு மலசலகூடம் இல்லை என்றால் எவ்வளவு கஸ்ரம் என்று எங்களின் வாழ்க்கையில் நீங்கள் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் என்ற கருத்தை முன் வைத்தாh இக் கிராமத்தின் கடற்தொழிற் சங்க தலைவர்  விஸ்ணுதாஸ். 'மக்கள் என்னிடம் வந்து கதைத்தார்கள் நானும் கதைக்கவேண்டியவர்களுடன் எல்லாம் கதைத்து விட்டேன் ஆனால் எந்த பிரியோசனமும் தெரிவதாக இல்லை. இப்போது iஉசஉ நிறுவனம் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளது. வசதிகள் இல்லாத வீட்டிற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதாவது 58 வீட்டிற்கு மலசலகூடம் இல்லை. ஆனால் சுனாமி வந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரேஒரு வீட்டில் மட்டும்தான் மலசலகூடம் இருந்தது. அந்தக்காலப்பகுதியில் தான் பெரிதும் சிரமப்பட்டோம். கடலுக்குள் மலசலம் கழித்தவர்களும் வீடுகளுக்கு அப்பால் மலசலம் கழித்தவர்களும் அதிகம் என்று கூறியவரை இடை மறித்து
' கடலுக்குள் தற்போதும் இப்படியான காரியங்களை மக்கள் செய்கின்றார்களா?' என்று கேட்ட போது... தற்போது விரும்பத்தகாத காரியங்கள் செய்வது குறைந்துவிட்டது.அவ்வாறு அசிங்கமான காரியங்களில் ஈடுபடுவோருக்கு ஐந்நூறு ரூபா தொடக்கம் ஆயிரம் ரூபா வரை குற்றப்பணம் அறவிடப்படும். எங்கள் கடற்கரைக்குச் சுற்றுலாப்பயணிகள் வருகைதருகின்றனர். அதனால் கடற்கரையை அழகாக வைத்திருப்பது எங்கள் கடமை ஆகும்.இப்படியான காரியங்கள் நடைபெறுவதை நாம் யாரும் விரும்புவதில்லை' என்றார்.

'பக்கத்துவீட்டிற்கு இரவு நேரங்களில் சென்றால் முகம் சுழிப்பார்கள்' என்றார் இக்கிராமத்தைச் சேர்ந்த முப்பது வயதான நரேஸ் சந்திரவாணி. 'எங்கட வீடும் அலைன்ஸ் நிறுவனத்தின் வீட்டுத்திட்டத்தின் கீழுள்ள வீடுதான்.அதான் இன்னும் வீடு கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளது.வீடே முழு மனையாக முடியவில்லை.மழை காலங்களில் அன்றாட வேலைகள் செய்வதிலும் தூங்குவதும் கஸ்ரம்.வீடு முழக்கத் தண்ணீர் வந்துவிடும். இருப்பதற்கே கஸ்ரம். குடிப்பதற்கு,குளிப்பதற்க்கு மற்றும் பிற தேவைகளிற்கான நீரை பக்கத்து வீடுகளில் இருந்தே பெறக்கூடிய நிலைமையில் இருக்கின்றோம். இதற்காக எத்தனை தடவை பேச்சு வேண்டி இருக்கறேன். அதுவும் நான் ஒரு பெண்.ஆண்கள் போல பொதுக்கிணற்றில் குளிக்கவா முடியும்? என்றார் மிக மனவேதனையுடன்.

அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது ஒரு புறம் இருக்க எமது கிராமத்துக் கடற்கரையில் தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தால் எமது கிராமம் நீருக்குள் மூழ்கும் நிலைக்கு நாளுக்குநாள் வந்துகொண்டிருக்கிறது.' ஏன்று கூறினார் தும்பளை கிழக்கு கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் விஸ்ணுதாஸ்.

'சுனாமிக்குப் பிறகு கடல் மாரி காலத்தில் முன்னோக்கி வந்துகொண்டிருக்கிறது. சுனாமி அடிப்பதற்கு முன்பு எங்கோ இருந்த கடல் தற்போது எமது கிராமத்தை நோக்கி ஊடுருவிக் கொண்டிருக்கிறது. எமதுகிராமக் கடற்கரையின் ஓரத்தில் மணல்மண் மட்டுமே உள்ளது.பாறைகள் எதுவும் இல்லை.மணலை நீர் அடித்துக் கொண்டே செல்கின்றது. 'யூசி' எனும் நிறுவனம் தடுப்பு மதில் கட்டுவதற்கு பணம் ஒதுக்கியுள்ளது. அவர்கள் தற்போது கொட்டடிப் பகுதியில் தடுப்பு மதிலைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக ;கிராமத்திற்க்குத் தற்போது தடுப்பு மதில் தேவையே இல்லை .ஏனெனில் அவர்கள் பகுதியில் இருக்கும் கடலில் பாறைகள் இருக்கின்றமையினால் மண்ணரிப்பு ஏற்படாது. ஆனால் எமக்கு அப்படி அல்ல.எங்களுக்குத் தடுப்புச்சுவரை வேகமாக கட்டித்தந்து எமது கிராமத்தை மண்ணரிப்பில் இருந்து விடாமல் கூறிமுடித்தார்.

இக்கிராமமக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் பாரிய பிரச்சனையாக மாறியுள்ளது. 'கடலை விட மோசம் இந்த குளம்' என்றார் 80 வயது மதிக்கத்தக்க முதியவரான ஆறுமுகம் இராமச்சந்திரன். 'என் அப்பா, தாத்தா காலத்தில் இருந்து இப்பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது.மழைகாலத்தில் இக்குளத்தில் நீர் தேங்கிவிடும்.எல்லாக் கழிவுகளும் இந்நீரோடுதான். மாரி காலத்தில் இருக்கவும் முடியாது. இந் நீரில்  நுளம்புகளின் பெருக்கவும் அதிகம். மழைகாலத்தில் சும்மாவே இருக்கமுடியாது. இதில் நுளம்பும் சேர்ந்து கொண்டால் சொல்லவே தேவை இல்லை என்று கூறினார்.

இப் பிரச்சனை தொடர்பாக ஒருவரிடமும் தெரிவிக்கவில்லையா என கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் விஸ்ணுதாசைக்  கேட்டபோது ' சுகாதாரப்பிரிவில் இருந்து எல்லோரும் பார்த்துவிட்டுதான் சென்றுள்ளார்கள் ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. எங்களால் முடிந்தளவு மண் குப்பைகள் போட்டு மூடிவிட்டோம். ஆதற்கு மேல் எங்களால் ஒன்றுமே செய்யமுடியாது. எங்கள் கிராமத்தை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை சிரமதானம் செய்து கொண்டுதான் இருக்கின்றோம். இவற்றை ஒன்றுமே செய்யமுடியாதுள்ளது என்று தெரிவித்தார்.

அக் குளத்தில் எங்கு பார்த்தாலும் குப்பை கூழங்களே நிரம்பி இருந்தது. இது மழைகாலத்தில்  இந்த குப்பைகள் நீருடன் கலக்கின்றது. இவை அனைத்தும் அங்கிருக்கும் பொதுக்கிணற்றில் கலப்பதனால் மாரிகாலங்களில் பொதுக்கிணற்றை யாரும் பயன்படுத்துவது கிடையாது. அதைவிட இப் பொதுக்கிணறு உடைந்த நிலையிலேயே உள்ளது. சுகாதார திணைக்கள அதிகாரிகள் குப்பைகளை போட்டு எரியுங்கள் கிணற்றையும் மூடிவிடுங்கள் என்று கூறியதனால் இக் கிராம மக்கள் மண்ணைப்போட்டு இயன்றளவு இக் கிணற்றை மூடி வருகின்றனர்.

இக் கிராம மக்கள் எத்தனை பிரச்சனைகளுடன் தான் வாழ்கின்றார்கள். இவர்களின் பிரச்சனைகளில் தெருப்பிரச்சனைதான் தற்போது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. மழைகாலங்களில் இக் கிராமத்துக்கு பயணம் செய்ய முடியாத சூழ்நிலையே நிலவி வந்துள்ளது. ஏனெனில் எல்லா இடங்களிலிலும் இருந்து வரும் தண்ணீர் இவர்களின் கிராமத்தின் வழியாலேயே கடலை அடைந்து கொண்டிருந்தது. இதனால் கிராமமே நீரில் மூழ்கி விடும். அந்த நேரங்களில் உதயசூரியன் சனசமூகத்தையே மக்கள் தஞ்சமடைவார்கள். மழைநீரை வெட்டி விடும் வரை மக்கள் தமது அன்றாட தேவைகளை செய்து முடிக்க மிகுந்த சிரமம் அடைந்திருந்தனர். இதற்கு முடிவு வந்தாற்போல வீதிகளுக்கு 'ஸ்லோன்பைப்' வைத்து கொங்கிறீட் வீதிகளை வழமைக்கு மாறாக ஆறு இஞ்சி உயர்த்தி வீதிகளை போட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த மாரி காலத்தில் இக் கிராம மக்கள் சிரமம் இல்லாமல் வீதிகளில் பயணிக்கின்றார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும.;

இவர்களின் பிரச்சனைகள் முடிவிற்கு வரவில்லை என்றால் ஒன்று சேர்ந்து இந்த கிராமத்தில் இருந்த மதுபான கடையை ஒழித்தது போல எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினால் தானோ இவர்களின் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வீதிப்பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் மக்கள் மற்றைய பிரச்சனைகளிலும் இருந்த மீண்டு வருவார்களா என்பது சந்தேகமே.

இல்லாத ஒன்றிற்கு எதற்காக தினம்??



நூறாயிரம் போர்வீரர்களின் துப்பாக்கி முனையில் செருகப்பட்டிருக்கும் கூர்மையான கத்தியைவிட செய்தித்தாள்களைக் கண்டு நான் பயப்படுகின்றேன்' என்றார் நெப்போலியன்.

இவர் கூறிய வார்த்தைகளுக்கு மாறாக இன்று ஊடகவியலாளர்களைப் பார்த்து பயப்படும் காலம் போய் ஊடகவியலாளர்கள் இந்த உலகத்தில் பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தல் ஒரு ஊடகவியலாளன் தனது கருத்துக்களை சுதந்திரமாக வைக்கமுடியாத சூழலே நிலவுகின்றது.அரசாங்கத்திற்க்கு எதிராக ஒரு கருத்தை முன்வைக்கும் போதே ஊடகவியலாளர்கள் மீது எல்லோர் மீதும் பார்வை திரும்புகின்றது.அடுத்த கணம் அந்த ஊடகவியலாளன் 'கடத்தப்பட்டார் அல்லது தாக்கப்பட்டார்' என்ற செய்தி வெளிவரும்.
இன்று எத்தனையோ ஊடகவியலாளர்;கள் தமது உயிரை இழந்துள்ளனர்.பாதுகாப்பாக வாழமுடியாமல் நாட்டைவிட்டே வெளியேறியுள்ளனர்.

குகநாதன் தாக்கப்பட்டபோது அவருக்காக நடாத்தப்பட்ட பேரணியில் ஊடகசுதந்திரம் இல்லை என்ற கருத்தை முன்வைத்தார்கள். இன்று ஊடகசுதந்திரம் இருக்கின்றது என்று கூறி மே மூன்றாம் திகதி இத்தினம் கொண்டாடப்படுகின்றது.ஆனால் ஊடக சுதந்திரம் என்பது பெயரளவிலேயே மட்டும் காணப்படுகின்றது. ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்றால் ஊடகவியலாளர்கள் ஏன் தாக்கப்படுகின்றார்கள்? அவர்கள் ஏன் தமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க முடியாமல் உள்ளது?

ஒருவரை ஆக்குவதும் அழிப்பதும் உச்சத்தில் ஏற்றி விடுவதும் தாழ்த்துவதும் ஊடகவியலாளர்களின் கைகளிலேயே இருக்கின்றது.இதனால்தான்  அன்று நெப்போலியன் அவ்வாறான வார்த்தைகளைக் கூறினார்.ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றி அமைக்கும் வலிமை ஊடகத்திற்க்கு இருக்கின்றது என்றால் மிகையாகாது.பேனா முனைமூலம் தமது கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்லும் ஊடகவியலாளர்களின் பெறுமதியை யார் உணருகிறார்கள்? அதைவிட அவர்களை அழிப்பதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் தினம் ஒன்று இருக்கின்றது என்று இன்னைய தலைமுறையில் எத்தனை பேரிற்க்குத் தெரியும்? அப்படித் தெரிந்திருந்தாலும் அவர்களது எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணமுடியும்.

1991ஆம் ஆண்டில் இருந்து ஊடகத்திற்கென சுதந்திரம் உண்டு எனக் குறிப்பிடுகின்ற போதிலும் இன்ற பெயரளவில் மட்டுமே  காணக்கூடியதாக இருக்கின்றது.

இச்சூழ்நிலையில் உலக ஊடக தினம் அர்த்தமுள்ளதா? ஏன்பது சந்தேகத்திற்குரியதே.

எது எவ்வாறு இருப்பினும், ஊடகவியலாளர்களினால் பல நன்மைகளை நாட்டிற்குப் பெற்றுக் கொடுக்கமுடியும் என்பது மறுக்க மற்றும் மறைக்க முடியாத உண்மை.

சிறுவர்களின் எண்ணங்களை வெளிக் கொண்டுவந்த 'எனது உலகு' கண்காட்சி



சிறுவர்களின் மனதிலே இருக்கும் எதிர்பார்ப்புக்களையோ எண்ணங்களையோ யாருமே எளிதில் புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாது. அவர்களுக்கும் தமது மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பமும் அமைவதில்லை.
சிறுவர்களின் உலகம் மிகவும் பெரியது. ஆந்த உலகத்தில் எத்தனையோ விடயங்கள் உட்புதைந்து இருக்கின்றன. சாதாரணமாக சிறுவர்களுடன் உரையாடும் போது இதனை நன்றாக நாம் புரிந்து கொள்ளலாம். பெரியவர்களுக்கு அவர்களின் விடயங்கள் சிறியதாக இருந்தாலும் அவர்களின் உலகத்தில் அந்த  விடயம் மிகவும் பெரியது.

சிறுவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை முதல் முறையாக வெளிக் கொண்டு வந்தது 'எனது உலகு' கண்காட்சி. சிறுவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வளழமையாக உள்ளதை உள்ளவாறே புகைப்படங்கள் கண்காட்சியாக நடைபெறுவது வழக்கம். இதற்கு மாறாக 3 தொடக்கம் 5 வரை இருக்கும் சிறுவர்களினால் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவற்றை அப்படியே காட்சிப்படுத்தாமல் அந்தப் புகைப்படத்தில் சிறுவர்களினால் வரைகலை செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. புகைப்படங்கள் எல்லோருக்குமே கதைகள் பலவற்றை சொல்லும். அதிலே வரைகலையும் செய்து காட்சிப்படுத்தும் போது எத்தனை கதைகள் சொல்லும் என்பதை சொல்லவா வேண்டும்.

ஏதிர்காலத்தை கட்டி எழுப்புவது சிறுவர்கள்தான். வரும்காலத்தில் தமது கிராமம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த 'எனது உலகு' கண்காட்சி மூலம் மறுவன்புலோ சிறுவர்கள் எடுத்துக்காட்டி இருந்தனர்.

மறுவன்புலோ கிராமம் மீள்குடியேற்றப்பட்ட கிராமம் ஆகும். நாட்டில் இடம் பெற்ற அசாதாரண சூழ்நிலையினால் அங்கிருந்த மக்கள் 1995ம் ஆண்டுகளில் இக் கிராமத்தைவிட்டு வெளியேறி தற்போது கடந்த ஆண்டு ஆவணிமாதம் தமது சொந்த கிராமத்துக்கு மீள் குடியேறி உள்ளனர். இந்த கிராமம் மிகுந்த வறட்சியுடனும் ஆங்காங்கே வீடுகளுடனும் குடிப்பதற்கு நன்னீர் இல்லாமலும் இருக்கின்றது.

தமது கிராமம் சோலைகளுடனும்; அருகருகே வீடுகளுடனும் கோயில்களுடனும் இருக்கவேண்டும் இக்கிராம சிறுவர்கள் புகைப்படத்தில் வரைகலை செய்து இந்த சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டியிருந்தனர்.
அவர்களின் இவ்வாறான எண்ணங்களை வெளிக்கொண்டு வந்தது 'SDC' நிறுவனத்துடன் இணைந்து யாழ் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிமைய மாணவர்கள்தான்.  இந்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்களின் புகைப்பட ஆற்றலை வெளிக்கொணரும் வகையில் மறுவன்புலோ சகலகலா வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களினால் பயிற்சிப்பட்டறை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.அதிலே சிறுவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு அவர்களின் எண்ணங்களுடன் வரைகலை செய்து காட்சிப்படுத்தப்பட்டன. இந்த செயற்பாடு மக்கள் மததியில் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் கண்காட்சி பற்றிய மக்களின் கருத்துக்கள்.....இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. சிறுவர்களின் மனதிலே இருக்கின்ற விடயங்களை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இப்படியான கண்காட்சிகளை மேலும் நடாத்தவேண்டும். இதன் மூலம் மறுவன்புலோ சிறுவர்கள் எப்படி தங்கள் கிராமம் இருக்கவேண்டும் என்பதை எல்லோருக்கும் எடுத்துக்காட்டி இருக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் சிறுவர்களின் ஆற்றலை மேலும் வளர்க்க உதவுகின்றது என்றனர்.

சிறுவர்களின் மனதிலே இருக்கும் விடயங்களை அறிந்து கொள்வதற்கு இது சிறந்த வழி ஆகும். இதற்கு ஆரம்பப்புள்ளியை இட்டு வைத்திருப்பது 'SDC' நிறுவனமும் யாழ் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையமும் என்றால் மிகையாகாது.

Sunday, May 6, 2012

சமூகத்தினால் தன்னிலை இழந்த தப்பாட்டம்

காலத்தின் மாற்றத்திற்கேற்ப இந்த உலகமும் மாறிக் கொண்டு வருகின்றது. பழமையை மறந்து புதுமையை நாடுகின்றனர் மக்கள். இதனால் 'பழையன களைதலும் புதியன புகுதலும்' என்ற முதுமொழி  தற்போது வலுப் பெற்று வருகின்றது. பெரியோர்கள் எதற்கு சொன்னார்களோ தெரியாது ஆனால் தற்கால நடைமுறைக்கு இது சாத்தியம் ஆகியுள்ளது.  இதற்க்கு பறை சிறந்த எடுத்துக்காட்டு.பறை தமிழர்களின் பாரம்பரிய கலை ஆகும். இப் பாரம்பரிய கலை இன்று சமூகத்தினால் ஒடுக்கப்பட்டு எல்லோராலும் தாழ்த்திப் பார்க்கப்பட்டு வருகின்றது. இப் பறையை  தப்பாட்டம் என்று அழைப்பர்.

இன்றைய தலைமுறைக்கே பறை பற்றி அதிகமானவர்களுக்கு  தெரியாது. அப்படி இருக்க இனி வரும் தலைமுறைக்கு எப்படி தெரியும். இதற்கு காரணம் சமுதாயம் மட்டுமே! பறை என்பது ஒரு கலை. இந்தக்கலையை தெரிந்திருப்பவர் எல்லா வாத்திய கலையையும் வாசிக்க தெரிந்திருப்பான்.

ஆரம்ப காலத்தில் இப்பறை எல்லோராலும் மதிக்கப்பட்டே வந்தது. இப் பறை சமூகம் சார்ந்த கலையாகும். இது போர் ஆரம்பிக்கபட போகுது என்றால் எல்லோருக்கும் தெரிவிக்க பயன்பட்டது. ஆதிகால மனிதர்கள் வேட்டையாடுவதையே தொழிலாக செய்து வந்தனர். வேட்டையாடிய பின்பு ஓய்வாக இருக்கும் நேரங்களில் விலங்குகளின் தோல்களை கொண்டே பறையை செய்தனர். விலங்குகள் தம்மை தாக்க வரும் போது பறையினை அடித்து ஒலியை எழுப்பி துரத்தி தம்மை பாதுகாத்து கொண்டனர். இது மட்டுமல்லாது ஒரு மலையில் இருந்து இன்னொரு மலையில் இருப்பவர்களை அழைப்பதற்கும் பறையை பயன்படுத்தி உள்ளனர்.

விலங்குகளைக் கொன்றுஇ தின்று மிஞ்சிப்போகும் தோலை எதிலேனும் கட்டிவைத்துஇ காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய ஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும்இ வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறிஇ திருமணம்இ இறப்புஇ சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுக துக்கங்களிலும இடம் பெறும் கலையாகியது.

இவ்வாறு ஆதிகாலத்தில் முக்கியமாக இருந்த கலை இன்று மதிக்கப்படாமல் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்த சமுதாயம் என்றால் மிகையாகாது. பறை அடிப்பவர்களை என் இந்த சமூகம் இழிவாக பார்க்கின்றதோ?

பறை செய்வதற்கு வேம்பு மாட்டுத் தோல் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தெருவோரங்களில் இருக்கின்ற வேப்ப மரங்களையே அதிகம் பயன்படுத்துவர். இதற்கு காரணம் பறை அடிக்கும் போது அதிலிருந்து சத்தம் அதிகமாக வெளிவர வேண்டும் என்பதற்காக.... வீதிகளில் இருக்கும் மரங்கள் வாகனச் சத்தங்களை அதிகமாக உள்வாங்கிக் கொள்ளும். இதனால் பறை அடிக்கும் போது அதிகமான சத்தம் வெளியில் வரும். இதற்காகத் தான் பறை செய்வதற்கு தெருவோர மரங்களை பயன் படுத்துகிறார்கள். அதே போலத்தான் மாடுகளிலும் இளம் ஆண் மாடுகளின் தோலை எடுத்துத்தான் பறை செய்வார்கள். ஏனெனில் அதன் தோலில் உள்ள ரோமம் உரமாக இல்லாமல் இருக்கும்.

பறை அடிப்பவர்களை இந்த சமூகம் சாதியின் பெயர் சொல்லி ஒதுக்க ஆரம்பித்தது. இதன்படி ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறை ஆட்டம் ஒதுக்கப்பட்டது. அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறிய  சமூகம்இ அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தைஇ சாவுமேளம் என என முத்திரை குத்தியது. இப்படியே காலம் செல்ல செல்ல சாதி குறியீடாக மாறியது. அச்சமூகத்தின்  இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாக கருதத் தொடங்கினர். இவ்விதம் மெல்ல மெல்ல அக்கலை அழியும் நிலைக்கு வந்தது. ஆனால் சாவு வீடுகளில் பறை அடிப்பார்கள் வெட்டியான் என்றே அழைக்கபடுவர். பறை அடிப்பவர்கள் எல்லோரும் வெட்டியான் அல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இக்காலகட்டத்தில் தான்  சமூகத்தினால் தாழ்த்தப்பட்ட கலைக்கு புத்துயிர் கொடுத்தவர் தென்னிந்திய நாட்டார் கலைஞன் ஆடலரசு வேணுகோபாலன். இவர் தன் கிராமத்தில் பட்டாதாரியாகி சட்டதரணியாகவும்  ஊடகவியலாளாளனாகவும்  கலைஞனாகவும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகின்றார். அதுமட்டும் அன்றி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து இவ் தப்பாட்டத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தவர்.  இத்தகைய கலைஞர்கள் இருக்கும் வரை பாரம்பரிய கலைகள் அழியாமல்  அடுத்த சந்ததியையும் சென்றடைந்து அவர்களும் இக்கலையை கற்றுக் கொள்வார்கள் 

இனிவரும் காலங்களில் பறை சாதி ஒடுக்கு முறையில் இருந்து விடுபட்டு ஆரம்பகாலத்தில் இருந்ததைப்போல இருப்பதற்கு இந்த சமூகம் பறை பற்றிய தப்பான அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நாட்டார் கலை என்பது குறித்த ஒரு சமூகத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஆனால் இன்று நாட்டார் கலையை அறிந்து இருப்பவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். நாட்டார் கலையை அறிந்த மக்கள் குறைவாக இருந்தாலும் நாட்டார் கலை இன்னும் முற்றாக அழியவில்லை.

கருத்து சுகந்திரம்





ஒருவர் தான் விரும்பிய கருத்தை வெளியிடவும் பகிர்ந்து கொள்ளவும் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளது. உரிமைகளும் சுகந்திரங்களும் என உலக நாடுகளில் மத்தியில் கூறிக் கொள்ளும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாட்டில் மக்களின் வாய்கள் கட்டப்பட்டுள்ளது யாருக்கு தெரியும்?

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனநாயகம் நிலைத்து விட்டது. மக்களுக்கு பூரண சுகந்திரம் இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. ஆனால் மக்கள் சுகந்திரமாக தமது கருத்துக்களை கூற முடியாத நிலையே காணப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்து மக்கள் அரசியல் அரசாங்கத்துக்கு எதிராக தமது கருத்துக்களை கூற மறுக்கின்றனர்.

இவர்கள் தாம் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துச் சொன்னால் உயிருடன் நடமாடுவோமா என்ற அச்சத்துடனேயே வாழ்கிறார்கள். தமக்கு எந்த பிரச்சனையும் வராது என்ற விடயங்களுக்கே கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஒரு விடயம் தொடர்பாக கருத்துக்களை கேட்பதற்கு அணுகியபோது தான் இவர்களின் கருத்துச் சுகந்திரம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரிந்தது.

அவர்கள் எங்களுக்கு நடந்தது தெரியும் நடப்பது தெரியும் ஆனால் சொல்ல மாட்டோம். நீங்கள் கேட்டுவிட்டு கண்டபடி எழுதுவீர்கள். அதற்கு பிறகு வரும் பிரச்சனைகளை யார் பார்த்துக் கொள்வார் என்று கிறீஸ் பூதம் தொடர்பான பிரச்சனைக்கு நாவாந்துறை மக்கள் கூறினார்கள். கிறீஸ் பூதம் தொடர்பான பிரச்சனைகள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கினாலும் அது தொடர்பான பீதியில் இருந்து மக்கள் இன்னும் நீங்கவில்லை என்பது தெட்டத்தெளிவாகியது.

கிறீஸ் பூதம் தொடர்பாக அதிகளவில் பாதிக்கப்பட்டது நாவாந்துறை மக்களே. ஆனால் இவர்கள் இது தொடர்பாக எந்தவித தகவல்களையும் ஊடகங்களுக்கு தர மறுக்கின்றனர். எமக்கு குழந்தைகள் இருக்கின்றது. அவர்களின் எதிர் காலத்தை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். உங்களுக்கு கருத்து சொன்னால் அடுத்த கணமே இருப்போமா இல்லையா என்று கூட தெரியாது. நீங்களே பாருங்கள். எங்களை சுற்றி எத்தனை இராணுவமுகாம்கள் இருக்கின்றது. இதற்கு பிறகும் நாம் எவ்வாறு பிரச்சனைகள் பற்றி சொல்லுவது. சில சில இடங்களை பாருங்கள் தானாகவே உங்களுக்கு புரியும் என்று தெரிவித்தனர்.

இவர்கள் ஒரு இக்கட்டான சூழலிலேயே வாழ்கின்ற தன்மையை பார்க்க கூடியதாக இருந்தது. அங்கிருக்கும் மக்கள் பயத்தின் காரணமாக தமது கருத்துக்களை தர மறுக்கின்ற சூழலே காணப்படுகின்றது.

இது மட்டும் அன்றி தமிழர்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்ட விடயம் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம். இத் தீா்மானம் குறித்து எல்லோராலும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் யாருமே தமது கருத்துக்களை ஊடகங்களுக்கு முன் வைக்க மறுக்கின்றனர். நீங்கள் கூறும் கருத்துக்களால் எந்த பிரச்சனையும் வராது. இவற்றை நாம் வெளியிட மாட்டோம் என கூறினாலும் அதிகமான  மக்கள் தமது கருத்துக்களை வெளியிட மறுக்கின்றனர்.

இலங்கை அரசுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் எம்மை இணைத்து விடாதீர்கள் எமது குடும்பத்தை நிர்க்கதியாக்கிவிடாதீர்கள் என்று தெரிவித்தனர். வேறு விடயங்களுக்கு கருத்துக்கள் வேண்டும் என்றால் தருகின்றோம் ஆனால் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு மட்டும் கருத்துக்கள் தர மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக வேறு ஒரு பொதுமகனை சந்தித்த போது நான் உங்களுக்கு கருத்து தருகின்றேன். என்னை யார் பாதுகாப்பார். எனக்கு வரும் பிரச்சனைகளுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கூறுங்கள் நான் கருத்து தருகின்றேன் என்று கூறினார். உயிருக்கு யார் உத்தர வாதம் தருவது என்ற கருத்து எல்லோரினாலும் முன் வைக்கப்பட்டது.

இது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் இப் பிரச்சனை தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் தர மாட்டாம். இப்போது தான் நாம் இலங்கை வந்துள்ளோம். நாம் உயிருடன் திரும்பி  எமது நாட்டுக்கு போக வேண்டும் தயவு செய்து எம்மை பிரச்சனைக்குள் இழுத்து விடாதீர்கள் என்று தெரிவித்தனர்.

ஜெனிவா பிரச்சனை தொடர்பாக கருத்துக்கள் கேட்டாலே அந்த இடத்தை விட்டு நீங்கி விடுகின்றனர். சிலர் அரசாங்கத்துக்கு எதிராக நா்ம் கருத்து தர மாட்டோம் வேண்டும் என்றால் அரசாங்கத்துக்கு  ஆதரவாக கருத்துக்கள் தருகின்றோம் என்று கூறியவர்களும் இருக்கின்றனா்.

பொது மகன் ஒருவர் குறிப்பிட்ட நபர் ஒருவரின் பெயரை கூறி அவர் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக் கூறியதால் இன்று உயிரோடு இருக்கின்றாரா என்பதற்கு விடை தெரியாமல் இருக்கின்றோம். அது போலதான் கருத்துக்களை் வெளியிட்டால் எமது நிலைமையும். அதைவிட் மீண்டும் வெள்ளை வான் பிரச்சனை தொடங்கிவிட்டது. உங்களுக்கு கருத்து சொன்னால் அடுத்த கணமே என் வீட்டு வாசலில் வெள்ளை வான் நிற்கும் என்று கூறினார்.

இலங்கையில் இருக்கும் வரை ஒரு  கருத்தை சுகந்திரமாக சொல்ல முடியாத சூழலே இன்று உள்ளது. இலங்கையில் இல்லாத தமிழர்கள் இலங்கை மக்களுக்காக குரல் எழுப்புகின்றனர். இவர்களும் இலங்கை வந்துவிட்டால் வாய்பேசா மடந்தைகள் ஆகிவிடுவார்கள்.

Sunday, April 1, 2012

ஆதரவு தேடும் அன்பு தந்த கரங்கள்



சிறுவயது முதல்கண்ணை இமை காப்பதுபோல அந்திபகலாய்ஆதரித்து இன்று ஆதரிக்கயாருமின்றி பலதுன்பங்களுடனும் ஏக்கங்களுடனும் வாழும்எம் உறவுகளாம்முதியவர்களின்நிலையை யார் தான்கண்டு கொள்கிறார்கள்.

பத்து மாதம் வயிற்றிலேசுமந்தாள் அன்னை.நெஞ்சிலே சுமந்தார்தந்தைஇவர்களைசுமக்க யாரும் இல்லாமல் முதியோர் இல்லங்களே இருக்கின்றனசமுதாயத்திலே....

வாழ்க்கைக்கு வித்திட்டு வாழ்வாங்கு வழிகாட்டி வாழ வைத்ததொழுகைகுரியவர்களை இன்றைய தலைமுறைகள்கண்ணெடுத்தும் பார்க்காமல் வயோதிபர் என பட்டம் சூட்டி இன்றுவயோதிபர் இல்லங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.

எமது உறவுகளை வயோதிபர் எனவும் பாரமாகவும் நினைக்கும்பிள்ளைகளை அவர்களும் தமக்கு பிள்ளைகள் பாரம் எனநினைத்திருந்தால் இவர்கள் தான் எங்கேமுதியோர் இல்லங்கள்தான் எங்கே?
அன்னையாய் தன்தையாய் அறிவுக்கும் ஆசானாய் இனிய கதைகள்சொல்லும் பாட்டனாய் பாட்டியாய் பக்குவாமாக பல விடயம் கூறிவிட்டு இன்று பாதை தெரியாமல் தவிக்கும் முதியவர்கள் ஏராளம்.

எமது பிள்ளைகள் இவர்களின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும்என நினைத்து ஓடியோடி உழைத்து ஓடாய் தேய்ந்து சமுதாயத்தில்நல்ல நிலையில் வைத்தவர்களுக்கு செய்யும் கைம்மாறு நன்றிகடன் என்ன தெரியுமா?  அவர்களை முதியோர் இல்லங்களுக்குஅனுப்பி வைப்பதுதான்எல்லோரும் ஒருகணம் சிந்திக்க வேண்டும்எம் கைபற்றி நடை பயில வைத்தவர்களை அவர் கோலுன்றி வரும்பொது பரிகாசம் செய்வதும் தூற்றுவதும்  அவர்களது மனம்நோகும்படி நடப்பதும் போன்ற காரியங்களை நாம் நிறுத்திக்கொள்ளவேண்டும்இதனால் அவர்களின் மனது எவ்வளவு வேதனைப்படும்என்பதனை நீங்களும் வயோதிபர் ஆகும் காலத்தில் உணர்ந்துகொள்ள நேரிடும்.  உறவுகள் மீது இருந்த பற்றும்பாசமும்தற்போது பணத்தின் மீது சென்றுவிட்டதுவாழ்க்கைக்கு பணம்தேவை தான்ஆனால்பணமே வாழ்க்கையாகி விடக் கூடாதுஎன்பதை உணர வேண்டும்பெற்றோர்கள் குழந்தைகளை வளர்த்துஆளாக்குவதற்கு எத்தனை தியாகங்களை செய்கின்றனர் என்பதை எல்லாம் எண்ணிப் பார்த்து அவர்களிடம் பாசத்தோடும்,அன்போடும் நடந்து கொள்ள வேண்டும்.

சிலர் உயர் கல்வி பயில்வதற்காக வெளி நாடுகளுக்குச்செல்கின்றனர்கல்வி பயின்ற பின் அங்கேயே நல்ல வேலை தேடிக்கொள்கின்றனர்பின்னர் திருமணம் செய்துகொண்டு அங்கேயேகுடும்பத்துடன் இருந்து விடுகின்றனர்.வெளிநாடுகளின் கலாசாரதாக்கத்தால்பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற கோட்பாடுமறையத்தொடங்கியுள்ளது.  இதன் விளைவாக வயதான தாய்,தந்தையர் முதியோர் இல்லத்தையே தங்கள் சொந்த இல்லமாகநினைத்து வாழ வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

ஒவ்வொரு தாய் தந்தையரும் தமது பிள்ளைகளை பெற்றுவளர்க்கும் போது கடைசிகாலத்தில் தன்னுடன் இருப்பான் எனநினைத்து தான் பாசத்தை ஊட்டி வளர்க்கிறார்கள்அவர்களுக்குஎத்தனை கனவுகள் இருக்கும் ஆனால் அதை எல்லாம் ஒருபொருட்டாக மதிக்காத இன்றைய தலைமுறை தமதுஆசைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்பெற்றோரும்மகனின் விருப்பம் எதுவோ அதற்கேற்றால் போல நடக்கின்றனர்.பிள்ளைகளும் ஒருகணம் சிந்திக்க வேண்டும் பெற்றோரை தனியாகதவிக்க விட்டு விட்டு வெளிநாட்டுக்கு செல்வது அவசியம் தானாஎன்று?

ஒவ்வொரு முதியோர் இல்லங்களில் இருக்கும் வயோதிபர்களின்கண்ணீருக்கு பின்னால் எத்தனை கதைகள் இருக்கும்எவ்வளவுஏக்கம் இருக்கும்பேரப்பிள்ளைகளை கொஞ்சி விளையாடும்நேரத்திலே இந்த முதியோர் இல்லங்கள் அவசியம் தானாதாய்தந்தையரை பாரம் என நினைப்பவன் இந்த பூமியிலே வாழ்ந்துஎதனை சாதிக்க போகிறான்?

தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை
 தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை"

என்ற கருத்தை எல்லோரும் மனதிலே வைத்திருந்தால் இந்தமுதியோர் இல்லங்களுக்கான தேவை இன்று இல்லைஅன்புஎன்றால் அம்மா பாசம் என்றால் தந்தை என்று எல்லோரும்கூறுவார்கள்இது வாய்வார்த்தை என்பதனை இந்த சமுதாயத்தில்இருக்கும் முதியோர் இல்லங்களை பார்த்தால் தெரிந்துவிடும்.

கடைசி காலத்தில் எந்த ஒரு பெற்றோரும் தமது பிள்ளைகளுடனும்பேரப்பிள்ளைகளுடனும் தான் கழிக்க விரும்புவார்கள்ஆனால்இன்று யாரும் அற்றவர்களாய் வாய்பேச மடந்தையர்களாய்கண்மூடி தனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்என்று சொன்னால் மிகையாகாது.

இந்நிலை மாற வேண்டும்முதியவர்களை இன்பமுற வாழ வைக்கவேண்டும்நம்மைப் பெற்றவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீரைபார்ப்பதற்கு நாம் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.முதியோர் இல்லங்களே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.

காவோலை விழ குருத்தோலை சிரித்தது என்ற பழமொழிக்குஇணங்க எதிர்காலத்தில் நாமும் இந்த நிலையில் தான் இருக்கபோகின்றோம் என்பதை மனதில் கொண்டால் இந்த முதியோர்இல்லங்கள் ஏன் இருக்க போகின்றது சமுதாயத்தில்கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்யாமல் தாய் தந்தையரைஅரவணைத்து நடந்தால் வாழ்வில் வெற்றிகள் சூழும்